அமெரிக்க சுகாதார ஊழியர்களுக்கான முக கவசங்களை வடிவமைத்து உற்பத்தி செய்யத் தொடங்கியுள்ளது ஆப்பிள் நிறுவனம்.

குபெர்டினோ நிறுவனம், வாரத்திற்கு ஒரு மில்லியன் முகக் கவசங்களை தயாரிக்க உள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்கா தவிர, மற்ற நாடுகளிலிலும் முக கவசங்களை தயாரிக்கும் திட்டங்கள் உள்ளன என்று ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்  கூறியுள்ளார்.

முன்னதாக, மார்ச் மாத இறுதியில், Apple  தனது  COVID-19   ஸ்கிரீனிங் செயலி மற்றும் வலைத்தளத்தை அமெரிக்காவில் வெளியிட்டது.

இது குறித்து ஆப்பிள் தலைமை நிர்வாக அதிகாரி டிம் குக்  கூறுகையில், “ஆப்பிள் தயாரித்த முகக் கவசங்கள் கடந்த வாரம் கைசர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. உற்பத்தி செயல் முறை மற்றும் முக கவசங்களுக்கான பொருட்கள் அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய நாடுகளிலிருந்து பெறப்படுகின்றன.

இந்த வார இறுதிக்குள் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக அனுப்ப திட்டமிட்டுள்ளோம். பிறகு வாரத்திற்கு ஒரு மில்லியனுக்கும் அதிகமானவை அனுப்பப்டும். ஒவ்வொரு முகக் கவசமும் முழுமையாக செய்து முடிக்க இரண்டு நிமிடங்களுக்கும் குறைவாகவே ஆகும்.

முகக் கவசங்கள் மிக அவசரமாக தேவைப்படும் இடத்திற்கு கொண்டுசெல்ல, அமெரிக்கா முழுவதும் உள்ள மருத்துவ வல்லுநர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுடன் நாங்கள் ஒருங்கிணைக்கிறோம்.”என்றார்.

இந்நிலையில்,ஆப்பிளைத் தவிர, அமெரிக்காவில் உள்ள பல்வேறு மின்னணு நிறுவனங்களும் கார் தயாரிப்பாளர்களும் வென்டிலேட்டர்கள் மற்றும் ஃபேஸ் மாஸ்க்குகள் மற்றும் கவசங்கள் மற்றும் ஹஸ்மத் உடைகள் உள்ளிட்ட பாதுகாப்பு கருவிகளுக்கான சுகாதார உபகரணங்களுக்கான உற்பத்தியை மாற்றி வருகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here