வாழ்க்கைமுறை

வாவ் சொல்ல வைக்கும் எலுமிச்சையில் இருக்கும் பயன்கள்

உடலில் தலை முதல் கால் வரை நிறைய நன்மைகளை தருகிறது. தலை முடி வளர்வதில் இருந்து, பாதத்தில் இருக்கும் பித்த வெடிப்பு வரை இந்த எலுமிச்சை சாறு பயன்படுகிறது.

சாதாரண எலுமிச்சை என்று  நினைத்து இருந்தால் அதை  மாற்றி கொள்ளுங்கள். இதில் எண்ணற்ற  மருத்துவ பயன்கள் இருக்கிறது. உடலில் தலை முதல்  கால் வரை நிறைய நன்மைகளை தருகிறது. தலை  முடி வளர்வதில் இருந்து,  பாதத்தில் இருக்கும்  பித்த வெடிப்பு வரை இந்த எலுமிச்சை சாறு பயன்படுகிறது.

எலுமிச்சை ஜூஸ் ஆக எடுத்து கொள்வதில் இருந்து, எலுமிச்சை சாறை வெளிப்புறமாக தோலில் மீது பயன்படுத்துதல் என பல வழிகளில் இது பயன்படுகிறது. ஜூஸ் ஆக  கொள்ளும் போது , வாந்தி , மயக்கம், தலைசுற்றல் பிரச்சனைகள் உடனடியாக நிற்கும். உடலில் நீர்சத்து குறைத்து சோர்வாக இருக்கும் நேரங்களில் இத எலுமிச்சை ஜூஸ் எடுத்து கொள்வது மிகவும் பயளிக்கும். எலுமிச்சை ஜூஸ் உடன், தேன் கலந்து எடுத்து கொள்ளலாம். அல்லது உப்பு சர்க்கரை சேர்த்து குடிக்கலாம். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப இதை எடுத்து கொள்ளலாம்.

இது உடலில் இருக்கும் கழிவுகளை நீக்கி உடலை சுத்தமாக வைத்து கொள்ள  உதவுகிறது. கல்லீரலில்  சேரும் கழிவுகளை வெளியேற்றுவதில் இது முக்கிய பங்கு  வகிக்கிறது. சருமத்தில் இருக்கும் கழிவுகளை நீக்கி சரும புத்துணர்வுக்கு இது உதவுகிறது.  மேலும்.முகப்பரு, கரும்புள்ளிகள் வராமல் தடுக்கும். ஹார்மோன் குறைபாடுகளால் வரும் முகப்பருக்குள் வராமல் தடுக்கும்.

எலுமிச்சை சாறை எடுத்து தலையில் இருக்கும் தோழில் தேய்த்து 10 நிமிடங்கள் ஊற வைத்து  பின் குளித்தல் தலையில் இருக்கும் பொடுகு, பேன் போன்ற தொந்தரவுகள் வராமல் இருக்கும்.

எலுமிச்சை வாசனை  முகர்ந்து கொண்டு  இருந்தாலும்,மலை பகுதிகளில் பயணம் செய்யும் போது வாந்தி வராமல் இருக்கும்.

இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்து இருப்பதால் வயதான காலத்தில் வரும் முகத்தில் வரும் சுருக்கங்கள் வராமல் இளமையுடன் இருக்க உதவும். வயதான தோற்றம் வராமல் இருக்கும்.

இது சிட்ரஸ் பழ வகையை சார்ந்தது. இதில் வைட்டமின் சி  அதிகமாக இருக்கும். இதில் இரத்தத்தில் சேரும்  ஃப்ரீ ரேடிக்கல்களை வெளியேற்ற உதவும். இந்த  ஃப்ரீ ரேடிக்கல் ஆனது புற்றுநோய் உண்டாகும். எலுமிச்சை சேர்த்து கொள்வது புற்று நோய் வராமல் தடுக்கும்.

உடலில் கெட்ட  கொழுப்பை குறைக்க உதவும். தினம் ஒரு  முறை எலுமிச்சை சாறு எடுத்து கொள்வது  உடலில் கொழுப்புகள் சேராமல் தடுக்கும்.

இத்தனை பயன்கள் இருக்கும் எலுமிச்சையில், கிடைக்கும் நேரங்களில் , அல்லது வாரத்திற்கு ஒரு 3,4 முறை இந்த எலுமிச்சை சாறை எடுத்து கொள்வது நல்லது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button