வால்வுடன் கூடிய N95 முகக்கவசங்கள் நோய் பரவுவதை தடுப்பதில்லை எனவும் அதை அணிய வேண்டாம் என்றும் கூறியிருக்கிறது மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. ஏன்..? எதனால் என்பதை பார்ப்போம்.
முதலில் மாஸ்குகளைப் பற்றித்தெரிந்து கொள்வோம்.
N95 மாஸ்க்:
N95எனும் முகக்கவசம் தான் சந்திக்கும் நுண் துகள்களில் 95% ஐ வடிகட்டும் திறன் கொண்டது என்று பொருள்படுகின்றது. முக்கியமாக மருத்துவ ஊழியர்கள் இந்த முகக்கவசத்தை அதிகம் வாங்கி அணிகின்றனர்.பொதுமக்களிடையேயும் இதன் பயன்பாடு அதிகரித்திருக்கிறது.
Central Government issues advisory says N95 Mask can not stop ...
N95 முகக்கவசமானது “இருபக்க பாதுகாப்பை தரவல்லது”,அதாவது இதை அணிந்திருப்பவருக்கும் எதிர் இருப்பவருக்கும் பாதுகாப்பு தரும்.இதை அணிந்து கொண்டு ஒருவர் இருமினால் தும்மினால் எதிரில் இருக்கும் ஒருவருக்கு கிருமி கடத்தப்படாது. மேலும் இதை அணிந்திருக்கும் போது எதிரில் இருப்பவரிடம் இருந்து வரும் வைரஸையும் இது தடுக்கும் வல்லமை கொண்டது என்று அறியப்படுகிறது.நம்பப்படுகின்றது.
சர்ஜிகல் மாஸ்க்:
சர்ஜிகல் மாஸ்க் என்றும் 3Ply surgical mask என்றும் அழைக்கப்படும் முககக்கவசமானது. அதை அணிந்திருப்பவருக்கு பாதுகாப்பு தராது.
ஆனால் எதிரில் இருப்பவருக்கு நோய் தொற்று தரும் வைரஸ் பரவாமல் தடுக்கும். இதை “ஒரு பக்க பாதுகாப்பு”என்று அழைப்போம். அதாவது சர்ஜிகல் மாஸ்க் அணியும் ஒருவர் இருமினால் தும்மினால் அவரிடம் இருந்து வைரஸ் பிறருக்குச் செல்லாது.
Surgical mask - Wikipedia
ஆனால் எதிர் இருப்பவர் இருமினால் தும்மினால் சர்ஜிகல் மாஸ்க் அணிந்திருப்பவருக்கு குறைந்த ஆபத்து உண்டு. ஆனால் எந்த மாஸ்க்கும் அணியாமல் இருப்பவரை விட ஆபத்து குறைவே.
மூன்றடுக்கு துணிக்கவசம்:
மூன்றடுக்கு துணிக்கவசம் அணிவது என்பது ஓரளவு நம்மிடம் இருந்து நோய் பிறருக்கு பரவாமலும் பிறரிடம் இருந்து நமக்கு நோய் தொற்று வராமலும் தடுக்கும்.எந்த முகக்கவசமும் அணியாதவரை விட துணியால் ஆன மூன்றடுக்கு முகக்கவசம் அணிந்தவருக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு குறைவு .
சரி.. இப்போது இந்த கேள்விக்கு வருவோம்..
ஏன் வால்வு வைத்த N95 மாஸ்க்குகள் வேண்டாம் என்று சுகாதாரத்துறை அறிவுறுத்துகின்றது??
காரணம் இந்த வால்வு வைத்த N95 மாஸ்க்குகளை அணிந்திருப்பவர் இருமும் போதும் தும்மும் போதும், அவரிடம் தோன்றும் வைரஸை வெளியே வால்வு வழியாக கசியவிடுகின்றது.இதனால் எதிர் இருப்பவருக்கு நோய் பரவும் வாய்ப்பு இருக்கின்றது.
அதுவே அந்த வால்வுகள் ஒருபக்கமாக தடுக்கும் வால்வுகளாக இருப்பதால் வெளியே இருந்து உள்ளே வரும் கிருமிகளை தடுக்கும் விதத்தில் உள்ளன.
Want N95 mask? Get doctor's prescription - The Hindu
இன்னும் தரம் குறைந்த N95 மாஸ்க்குளாக இருப்பின் அந்த வால்வுகள் வெளியே இருந்து உள்ளே வரும் கிருமிகளையும் முறையாக தடுக்காமல் விடும் வாய்ப்பும் இருக்கின்றது.இதனால் வால்வுடன் கூடிய N95 மாஸ்க்குகள் அணிய வேண்டாம் என்று சுகாதாரத்துறை கூறகின்றது.
சரி..நான் அதிக பொருட்செலவில் வால்வுடன் கூடிய N95 மாஸ்க் வாங்கி விட்டேன் இப்போது என்ன செய்வது என்று நீங்கள் கேட்பது புரிகிறிது.
உங்களுக்கான டிப்ஸ் இதோ…
1. மெடிக்கல் கடைகளில் பேப்பர் ப்ளாஸ்டர் வாங்கி அந்த வால்வு இருக்கும் பகுதியை நன்றாக அடைத்து ஒட்டி விடுங்கள். இப்போது உங்கள் மாஸ்க் வால்வு இல்லாத N95 ஆக மாறிவிடும். பேப்பர் ப்ளாஸ்டர் கிடைக்காவிடில் செல்லோ டேப் கொண்டு நன்றாக அந்த வால்வுகளை அடைத்து விடுங்கள்.
2. N95 மாஸ்க்குக்கு மேலே 3Ply surgical மாஸ்க் அணிந்தால் உங்களிடம் இருந்து வால்வு வழியாக வெளியேறும் தொற்றை 3PLY surgical mask தடுத்து விடும். இப்போது உங்களது மாஸ்க் பாதுகாப்பானதாக மாறிவிடும்.
3.சர்ஜிக்கல் மாஸ்க் வாங்க இயலாதவர்கள் மூன்றடுக்கு கொண்ட துணி மாஸ்க்கை வைத்து N95 முகக்கவசத்தை மூடிக்கொள்ளுங்கள். இப்போதும் அந்த துணிக்கவசம் உங்களது வால்வை மறைப்பதால் பிறர் பாதுகாப்புக்கு குந்தகம் ஏற்படாது.
எனவே, வாங்கி வைத்த N95 வால்வு உள்ள மாஸ்க்குளை தூக்கி எறிய வேண்டியதில்லை. அவற்றில் மேற்சொன்ன சிறு மாற்றம் செய்து உபயோகப்படுத்தமுடியும்.இதனால் நமக்கும் பாதுகாப்பு பிறருக்கும் பாதுகாப்பு நோய் நமக்கும் வராமல் பிறருக்கும் பரவாமல் தடுக்கமுடியும்.
நன்றி :Dr.ஃபரூக் அப்துல்லா, பொது நல மருத்துவர்.
Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here