சினிமாசெய்திகள்

தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை! மற்ற மொழி, டப்பிங் படங்களுக்கு முன்னுரிமை அளிக்க கூடாது! வாரிசு தெலுங்கில் வெளியாவதில் சிக்கல்??

விஜய் படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடுவதில் சிக்கல்…!!

பொங்கலுக்கு வாரசுடு திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடுவதில் சிக்கல்…!!

  • மற்ற மொழி படங்களுக்குத் திரையரங்கில் முன்னுரிமை அளிக்கக் கூடாது என தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்திருப்பதால் வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

vaarasudu_varisu_vijay_movie_telugu_industry

  • வம்சி இயக்கத்தில் விஜய் தற்போது வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவாகி வரும் வாரிசு திரைப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023 ஆம் ஆண்டு வெளியாக உள்ளது. தமிழில் வாரிசு எனவும் தெலுங்கில் வாரசுடு எனவும் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் சார்பில் தில் ராஜூ தயாரிக்கிறார்.
  • தற்போது இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் ஆடியோ வெளியீட்டு விழா அடுத்த மாதம் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • இந்த நிலையில் தற்போது வாரிசு திரைப்படம் தெலுங்கில் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை தான் இதற்கு முக்கிய காரணம். பொங்கல் மற்றும் தீபாவளி போன்ற பெரிய பண்டிகை நாட்களில் நேரடி தெலுங்கு படங்களுக்கு மட்டுமே முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். மற்ற மொழி படங்கள் மற்றும் டப்பிங் படங்களுக்கு திரையரங்கில் முன்னுரிமை அளிக்க கூடாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.vaarasudu_varisu_vijay_movie_telugu_industry
  • இதன் காரணமாக பொங்கலுக்கு வாரசுடு திரைப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தெலுங்கு தயாரிப்பாளர் சங்க துணை தலைவராக உள்ள தில் ராஜூ தான் வாரிசு திரைப்படத்தின் தயாரிப்பாளர். இந்த புதிய தீர்மானம் காரணமாக தற்போது தில் ராஜு கடும் நெருக்கடிக்கு தள்ளப்பட்டுள்ளார்.
  • சிரஞ்சீவி நடித்துள்ள வால்டர் வீரைய்யா, பால கிருஷ்ணா நடித்துள்ள வீர சிம்ஹா ரெட்டி, அகில் அக்கினேனி நடித்துள்ள ஏஜென்ட் உள்ளிட்ட திரைப்படங்கள் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 2023 ஜனவரி மாதம் தெலுங்கில் வெளியாக உள்ளது. இதன் காரணமாக தற்போது வாரசுடு திரைப்படத்திற்கு திரையரங்கு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் தற்போது வாரிசு மற்றும் வாரசுடு ரிலீஸ் தேதி தள்ளி வைக்க வாய்ப்புள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன எனினும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா நிறுவனம் திரைப்படம் நிச்சயம் வெளியாகுமென்று தில் ராஜூ தெரிவித்துள்ளார்.

vaarasudu_varisu_vijay_movie_telugu_industry

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button