துக்ளக் தர்பார் திரைபடத்தில் விஜய்சேதுபதியின் அரசியல்வாதி கெட்டப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, அதிதி ராவ், பார்த்திபன் உள்ளிட்டோர் நடிக்கும் படம் துக்ளக் தர்பார்.

 வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார்.

வயாகாம் 18 ஸ்டுடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்துக்கு நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் பட இயக்குநர் பாலாஜி தரணிதரன் வசனம் எழுதுகிறார்.

96 படத்தின் இயக்குநர் பிரேம்குமார் ஒளிப்பதிவு செய்கிறார். 96 படத்தை அடுத்து இந்தப் படத்துக்கும் கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

 துக்ளக் தர்பார் - விஜய் சேதுபதி

மேலும் படத்தில் நடிகை மஞ்சிமா மோகன், கருணாகரன், பக்ஸ் பெருமாள், ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளது.

இந்தப் படம் அரசியலை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இதன் படப்பிடிப்பு சுமார் 50% முடிவுற்றுள்ளதாகவும், கொரோனா பிரச்னை முடிந்த பின்னர் மீண்டும் தொடங்க உள்ளது.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here