நடிகை வனிதா விஜயகுமார் – பீட்டர் பால் என்பவரை கடந்த மாதம் 27-ம் தேதி கிறிஸ்துவ முறைப்படி திருமணம் செய்துகொண்டார். இதையடுத்து பீட்டர் பாலின் முதல் மனைவி எலிசபெத் ஹெலன், தன்னிடம் முறையாக விவாகரத்து பெறாமல் தனது கணவர் வனிதாவை திருமணம் செய்து கொண்டதாக வடபழனி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.

வனிதா விஜயகுமார் - பீட்டர் பால் ...

அதைத்தொடர்ந்து பீட்டர் பால் – வனிதா விஜயகுமார் திருமணம் பற்றி எலிசபெத் ஹெலன் வைத்த குற்றச்சாட்டுகளால், பல்வேறு தரப்பினரும் சமூகவலைதளங்களில் விமர்சனங்களை முன் வைத்து வந்தனர். தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கு அச்சப்படாமல் துணிவாக தனது யூடியூப் சேனலில் வனிதா விஜயகுமார் பதிலளித்து வந்தார்.

வனிதாவின் பிளான் இதுதான்! என் கணவரை ...

இந்நிலையில் சூர்யா தேவி என்ற பெண் யூடியூபில் தன்னைப் பற்றியும் திருமணம் குறித்தும் அவதூறாகப் பேசிவருகிறார் என்றும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் போரூர் எஸ்.ஆர்.எம்.சி காவல் நிலையத்தில் வனிதா விஜயகுமார் புகாரளித்துள்ளார். புகாரைப் பெற்றுக் கொண்ட போலீசார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here