கடந்த 1980ம் ஆண்டு தொடங்கி இன்று வரையில்  எண்ணற்ற படங்களில் எண்ணற்ற பாடல்களை ஆக்கித் தந்த கவிப்பேரரசு வைரமுத்து, 7 தேசிய விருதுகளை பெற்ற ஒரே கவிஞர் என்ற பெருமைக்குறியவர். 

மேலும் 140க்கும் மேற்பட்ட படங்களில் பாடல்களை இயற்றியுள்ள இவர், பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். வரும் 13ம் தேதி  பிறந்தநாளை கொண்டாட உள்ள அவர், தனது பிறந்தநாள் கொண்டாடட்டங்கள் குறித்து ஒரு தகவலை தனது ட்விட்டர் பக்கதில்  வெளியிட்டுள்ளார்.

 

அந்த பதிவில் “ஜூலை 13 பிறந்தநாள், நீங்கள் நின்ற இடம் நின்று நினைத்தாலே போதும்; உள்ளத்துப் பேரன்பை உள்ளுணர்வு உற்றறியும். ஏழைகளுக்கு முகக் கவசம் வழங்குங்கள். எங்கே போய்விடும் காலம்?அடுத்த ஆண்டு உங்கள் உள்ளங்கை தொட்டு வாழ்த்துக்கள் வாங்குவேன். வாழ்க வையகம் வாழ்க உயிர்க்குலம் வெல்க மானுடம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here