செய்திகள்விளையாட்டு

தென்னிந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழக வீரர்கள் சாதனை

தென்னிந்திய அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் தமிழக வீரர்கள் நான்கு பேர் தங்க பதக்கமும்,ஒருவர் வெண்கல பதக்கமும் பெற்று சாதனை படைத்தனர்.தென்னிந்திய அளவிலான கராத்தே போட்டி மார்ச் 5,6 ஆகிய தேதிகளில் தெலங்கானா மாநில தலைநகர் ஹைதராபாதில் நடைபெற்றது.தென்னிந்திய மாநிலங்களை சேர்ந்த வீரர்கள் கலந்து கொண்டனர்.இவர்கள் அனைவரும் அந்தந்த மாநிலங்களில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்று இதில் தகுதி பெற்றனர்.15 வயதுக்குட்பட்டோருக்கான  63 கிலோ சண்டை பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த விக்னேஷ் தங்க பதக்கத்தை வென்றார்.17 வயதுக்குட்பட்டோருக்கான 76 கிலோ சண்டை பிரிவில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரபாகரன் தங்கபதக்கத்தை வென்றார்.55 கிலோ மற்றும் 84 கிலோ சண்டை பிரிவில் தமிழகத்தை சேர்ந்த சுரேஷ்,அருண் பிரபாகரன் ஆகியோர் முறையே தங்க பதக்கத்தை வென்றனர்.67 கிலோ சண்டை பிரிவில் தமிழகத்தை சேர்ந்த தமிழ்செல்வன் வெண்கல பதக்கம் வென்றார்.பதக்கம் வென்ற அனைவரும் தேசிய அளவிலும்,மண்டல அளவிலும் நடைபெறும் கராத்தே போட்டிகளில் தேர்வாகியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button