தமிழகத்தில் 18.61 சதவீதம் குற்றச் செயல்கள் அதிகரித்துள்ளதாக தேசிய குற்ற ஆவண அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், “ரவுடி ராஜ்ஜியத்திற்கு ‘பெர்மிட்’ வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி, பழனிசானியின் ஆட்சி” என்று திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக இன்று திமுக தலைவர் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில், “தமிழ்நாட்டில் 2017-18 ஆம் ஆண்டுகளில் குற்றச்செயல்கள் 18.61% அதிகரிப்பு! சென்னையும், கோவையும் கொலைநகரங்கள் ஆகிவிட்டதாக தேசிய குற்ற ஆவண அறிக்கையில் தகவல்!
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் கோவையில் 40.79%, சென்னையில் 18.54% அதிகரிப்பு! தமிழக அளவில் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் 17.74% அதிகரிப்பு; சென்னையிலோ 211. 24% உயர்வு! மூத்த குடிமக்களுக்கு எதிரான வன்முறையில் தமிழ்நாடு இந்தியாவில் மூன்றாவது மாநிலம்!
காவல்துறையை அரசியல் மயமாக்கி, அதன் கைகளைக் கட்டி ரவுடி ராஜ்ஜியத்திற்கு ‘பெர்மிட்’ வழங்கியிருக்கும் அராஜக ஆட்சி முதலமைச்சர் திரு.பழனிசாமியின் ஆட்சி!” என்று குறிப்பிட்டுள்ளார்.
Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here