செய்திகள்

“வன்முறை என்பது மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் அதனைவிட மோசமானது!முதலில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பவனே இந்த சமூகத்தை மாற்ற தகுதி உடையவன்” – சுபாஷ் சந்திர போஸ்! nethaji subash chandrabose

எதுவாக இருந்தாலும் முகத்திற்கு நேராய் பேசும் துணிவு கொண்ட இந்திய வீரர் சுபாஷ் !

“முதலில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பவனே இந்த சமூகத்தை மாற்ற தகுதி உடையவன்- nethaji” 

 • வன்முறை என்பது மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் அதனைவிட மோசமானது!
 • அடால்ப் ஹிட்லரை சந்தித்து, எனக்கு அரசியல் குறித்து யாரும் கற்றுத்தர அவசியம் இல்லை என்று முகத்திற்கு நேரக பேசிவிட்டு வந்த நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 1897ஆம் ஆண்டு ஜனவரி 23ஆம் நாள் ஒரிசாவின் கட்டாக்கில் ஜானகிநாத் போஸ் மற்றும் பிரபாவதி தேவிக்கு மகனாக பிறந்தார்.

"வன்முறை என்பது மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் அதனைவிட மோசமானது!முதலில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பவனே இந்த சமூகத்தை மாற்ற தகுதி உடையவன்" - சுபாஷ் சந்திர போஸ்! nethaji subash chandrabose

 • குழந்தை பருவத்திலிருந்தே ஒரு சிறந்த மாணவராக போஸ் திகழ்ந்தார். 1911ஆம் ஆண்டு பிரசிடென்சி கல்லூரியில் இணைந்தார். பேராசிரியர் ஓட்டன் என்பவரை இந்திய விரோத கருத்துகளுக்காக தாக்கியதாக கல்லூரியிலிருந்து நீக்கப்பட்டார்.
 • பின் போஸ், கல்கத்தா பல்கலைகழகத்தில் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் பட்டம் பெற்றார். 1918-ல் பி.ஏ தத்துவவியலில் பட்டம் பெற்றார். அடுத்த ஆண்டு கேம்பிரிட்ஜ், ஃபிட்ஸ் வில்லியம் கல்லூரியில் இந்திய சிவில் சர்வீஸ் தேர்வில் வென்றார்.
 • தனது தந்தையின் விருப்பத்திற்கு இணங்க, சிவில் சர்வீஸ் துறையில் வேலைக்கு இணைந்தார். ஆனால், அது நீண்ட காலம் நிலைக்கவில்லை. ஏனெனில், ஆங்கிலேயருக்கு அடிமையாக வேலை செய்வதாக அவர் எண்ணி பணியை ராஜினாமா செய்தார்.பின் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் போஸ் தன்னை இணைத்துக் கொண்டார்.
 • தொடர்ந்து சித்தரஞ்சன் தாஸின் வழிகாட்டுதலிலும், ஆதரவிலும் போஸின் பாய்ச்சல் அதிகரித்தது. அதனுடன் இந்திய தேசிய காங்கிரஸில் இளைஞரணி தலைவராக உயர்ந்தார். அதனுடன், வங்காள மாகாணத்தில் காங்கிரஸ் செயலாளராகவும் பொறுப்பேற்றார்.
 • தொடர்ந்து சித்தரஞ்சன் நிறுவிய ஃபார்வேர்ட் (forward) என்ற செய்திதாளுக்கு ஆசிரியராக நியமிக்கப்பட்டார்.
 • "வன்முறை என்பது மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் அதனைவிட மோசமானது!முதலில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பவனே இந்த சமூகத்தை மாற்ற தகுதி உடையவன்" - சுபாஷ் சந்திர போஸ்! nethaji subash chandrabose
 • இந்திய சுதந்திர போராட்டத்தில் போஸின் தேசியவாத அணுகு முறை மற்றும் பங்களிப்பு ஆங்கிலேயர்களுக்கு ஒத்துவரவில்லை. எனவே 1925-ல் மாண்டலேயில் சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால் போஸ், அப்போது நடந்த வங்கதேச சட்டமன்ற தேர்தலில் சிறையில் இருந்தவாறே போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
 • தங்களது தடங்கல்கள் அத்தனையும் மீறி ஒருவரால் சிறையில் இருந்து வெற்றிபெற முடியும் என்றால், இவர் நமக்கு அச்சுறுத்தல் என்று பிரிட்டீஷ் அரசு நினைக்க துவங்கியது.
 • 1927ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட போஸ், காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர் பதவியை பெற்றார். தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் ஜவஹர்லால் நேருவுடன் இணைந்து பணியாற்றினார்.
 • 1930ஆம் ஆண்டு கல்கத்தாவில் மேயராக போஸ்க்கு பதவி வழங்கப்பட்டது. அப்போது, ஐரோப்பிய நாடுகளில் பயணம் மேற்கொண்டு, முசோலின் உள்ளிட்டோரை சந்தித்து சுதந்திரத்திற்காக உதவி கேட்டார்.
 • இவ்வாறு பல சம்பவங்கள் மூலம் போஸ் மிகவும் புகழ்பெற்ற தலைவரானார். அவரது புகழ் கண்டு வியந்த மற்ற தலைவர்கள் அவரை காங்கிரஸ் கட்சி தலைவராக நிமிக்க பரிந்துரைத்தனர்.
 • ஆனால், மகாத்மா காந்தி போஸை தலைவராக்க எதிர்ப்பு தெரிவித்தார். காரணம் போஸ் ஆங்கிலேயருக்கு எதிராக கடுமையாக நடந்து கொள்வதால் அதை அவர், ஏற்கவில்லை.
 • காங்கிரஸ்க்குள் கருத்து மோதல்கள் ஏற்பட்டது. இந்திய தேசிய காங்கிரஸில் பிளவு ஏற்பட்டு போஸ் தனது சொந்த அமைச்சரவையை உருவாக்கினார். 1939ல் காங்கிரஸ் தலைவர் தேர்தலில் காந்தியால் பரிந்துரைக்கப்பட்ட சீதாராமையாவை போஸ் தோற்கடித்தார். ஆனால், காங்கிரஸ் செயற்குழுவில் இருந்தவர்களுக்கும் போஸ்க்கும் கருத்து வேறுபாடுகள் இருந்ததால், அவரால் தலைவர் பதவியைத் தொடர முடியவில்லை.
 • ஜூன் 22, 1939 அன்று தலைவர் பதவியில் இருந்து விலகினார் போஸ். பின், பார்வர்ட் பிளாக் என்ற கட்சியை துவங்கினார். இதற்கு ஆங்கிலேயர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
 • "வன்முறை என்பது மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் அதனைவிட மோசமானது!முதலில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பவனே இந்த சமூகத்தை மாற்ற தகுதி உடையவன்" - சுபாஷ் சந்திர போஸ்! nethaji subash chandrabose
 • இரண்டாம் உலக போரின் போது காங்கிரஸ் தலைமையை கலந்தாலோசிக்காமல் இந்தியாவின் சார்பாக வைஸ்ராய் லார்ட் லின்லித்கோ போர் அறிவித்தார். அதை போஸ் வெகுஜனமக்களின் ஆதரவு திரட்டி எதிர்த்தார். அவரது இந்த நடிவடிக்கையால் 7 நாட்கள் சிறையிலும், 40 நாட்கள் வீட்டுக்காவலிலும் வைக்கப்பட்டார்.
 • வீட்டுகாவலில் இருந்து 41வது நாள் மலாவியாக உடையணிந்து தப்பினார். அங்கிருந்து ஜெர்மனியை அடைந்தார். தொடர்ந்து ஆப்கானிஸ்தான், சோவியத் யூனியன், மாஸ்கோ மற்றும் ரோமுக்கு பயணம் மேற்கொண்டார்.
 • தொடர்ந்து, ஜேர்மனியின், உதவியுடன் ஆசாத் ஹிந்த் என்ற வானொலி ஒன்றின் மூலம் அந்நாட்டில் இருந்து வெள்ளையர்களுக்கு எதிராக முழங்கினார். அடுத்து, இந்தியாவின் சுதந்திரத்திற்கு ஜெர்மனி மற்றும் ஜப்பானின் உதவியை நாடினார்.
 • ஹிட்லரை போஸ் சந்திக்கையில், இந்தியர்கள் காட்டு மிராண்டிகள் என்று அவரது புத்தகத்தில் குறிப்பிட்டத்தை சுட்டிக்காட்டி அந்த வாக்கியத்தை திரும்ப பெற போஸ் கூறினார். ஹிட்லர், இந்தியா சுதந்திரம் பெறுவது கடினம் என்று தெரிவித்தார். அதற்கு போஸ் எனக்கு எவனும் அரசியல் சொல்லித் தரத் தேவையில்லை என்று உங்கள் அதிபருக்கு கூறுங்கள் என்று மொழிபெயர்பாளரிடம் கூறிவிட்டு அங்கிருந்து வெளியேறினார். உலகில் முதல் முறையாக தன்னிடம் ஒருவர் அப்படி கூறியதால் போஸின் திராணியை நினைத்து ஹிட்லர் வியந்தார்.
 • போஸ் ஜெர்மனியின் தற்போதைய தலைநகரான பெர்லினில் இருந்து, ஆங்கிலேயருக்காக சண்டையிட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த 3000 இந்திய கைதிகளை விடுவித்து, இந்தியாவில் ஆங்கிலேயருக்கு எதிராக போராடும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட வைத்தார்.
 • இரண்டாம் உலகபோரில் ஜெர்மனியின் வீழ்ச்சி மற்றும் போரில் பின்வாங்கியது இவை அனைத்தும், ஜெர்மன் இந்தியாவிற்கு சுதந்திரம் வாங்க உதவும் நிலையில் இல்லை என்று போஸ் உணர்ந்தார். பின் பல இன்னல்களை சந்தித்த போஸ் 1943ஆம் ஆண்டு ஜெர்மனியில் இருந்து நீர்மூழ்கி கப்பல் மூலம் ஜப்பானை அடைந்தார்.
 • பின் அங்கிருந்து போஸ் சிங்கபூருக்கு சென்றார். அங்கு மோகன் சிங் அவர்களால் நிர்வப்பட்ட “ராஷ் பிஹாரி போஸ்” -ன் முழு கட்டுப்பாட்டையும் போஸ்க்கு வழங்கப்பட்டது. “ராஷ் பிஹாரி போஸ்” நிறுவனத்தின் முழு கட்டுப்பாடும் போஸ்க்கு வழங்கப்பட்டது. சுபாஷ் சந்திர போஸ்க்கு ஐ.என்.ஏ அசாத்து ஹிந்து ஃபாஜ்-ல் (இந்திய தேசிய இராணுவம்) ‘நோதாஜி’ என்று அறியப்பட்டார்."வன்முறை என்பது மோசமானது தான் ஆனால் அடிமைத்தனம் அதனைவிட மோசமானது!முதலில் தன்னை மாற்றிக் கொள்ள முயற்சிப்பவனே இந்த சமூகத்தை மாற்ற தகுதி உடையவன்" - சுபாஷ் சந்திர போஸ்! nethaji subash chandrabose
 • மரணம் இன்றுவரை உறுதிபடுத்தப்படாததால், இந்திய மக்களின் மனதில் மரணத்தை வென்ற மாவீரராகவே இன்றளவும் விளங்குகிறார் ; நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்!

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button