இலங்கை
தமிழை உயிருக்கு மேலாய் நேசித்த தலைவன்! தமிழுக்காகவும் தமிழீழ மக்களுக்காகவும் இறுதிவரை போராடிய ஒரே தலைவன் மேதகு.வேலுப்பிள்ளை பிரபாகரன்!medhagu veluppillai prabagaran!
தமிழ் மீது பெருங்காதல் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பற்றிய அரிய தகவல்கள்!

தமிழ் மீது பெருங்காதல் கொண்ட வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களை பற்றிய அரிய தகவல்கள்!
- வேலுப்பிள்ளை பிரபாகரன், 1954 நவம்பர் 26 ல் பிறந்து தமிழீழ மக்களுக்கு நடக்கும் அநீதிகளுக்கு எதிராக போராடிய மகத்தான தலைவர் ஆவார்.
- இவரை பற்றி சரியாக தெரிந்து கொள்ளாதவர்கள், பிறர் சொல்லும் தவறான சித்தரிப்பு கதைகளை கேட்டு அவ்வாறே நம்பி விடுகிறார்கள்.
- பிரபாகரனின் போராட்ட வாழ்க்கையின் மையக்கரு “தமிழீழ மக்களின் வாழ்வு நலமாக அமைய வேண்டும் மற்றும் உலக மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியான தமிழ்மொழி உயிர்ப்புடன் இருக்க வேண்டும்” என்ற ஒற்றை குறிக்கோளுடன் செயல்பட்டவர் தான் வேலுப்பிள்ளை பிரபாகரன்.
- இனி அவரை பற்றிய சில தகவல்களை சிலவற்றை பார்ப்போம்.
- பிரபாகரன், கொள்கையில் பின்வாங்காத ஓர் போராளி என்பது பெரும்பாலும் அனைவரும் அறிந்ததே.ஆனால், அவருக்குள் இருக்கும் குழந்தைத்தனம் பற்றி பலரும் அறிந்திருக்க வாய்ப்பு இல்லை.
- பிரபாகரனிடம் ஒருமுறை, “வாருங்கள் ஃபோட்டோ எடுத்துக் கொள்ளலாம்” என்று சொன்னபோது, சற்று இருங்கள் என்று சொல்லிவிட்டு ஓடிச் சென்று ஒரு பூந்தோட்டியை எடுத்து வந்து அருகே வைத்துக் கொண்டு “ஹ்ம்ம் இப்போது எடுங்கள்” என்று சிரித்துக் கொண்டே மழலை தன்மையுடன் சொன்னாராம். அத்தகைய குழ்ந்தை தனம் கொண்ட மழலை அவர்.
- பிரபாகரன்,கோழி அடித்து ருசியாக குழம்பு செய்வதில் வல்லவர்.
- பிரபாகரன்,கிட்டுவுக்கு இரண்டு விஷயங்களை சொல்லிக் கொடுத்தார். ஒன்று யுத்தம். இன்னொன்று சமையல்.
- விடுதலை புலிகள் இயக்கத்தில் அத்தனை பேருக்குமே சமைக்கத் தெரியும். அங்கே சமையல் ஒரு கட்டாயப் பாடம். சமைக்க கற்றுக் கொள்வது வேளைக்கு சாப்பிட வேண்டும் என்பதற்காக அல்ல. நாமே சமைத்து சாப்பிட்டால் தான் ருசி குறித்து அதிகம் யோசிக்காது இருப்போம்.ஆகவே நாமே சமைக்க கற்றுக் கொள்வது அவசியம் என்று சொல்வாராம், பிரபாகரன்.
- கொடுத்த வாக்கானாளும் சரி; எடுத்த முடிவானாலும் சரி.ஒரு சொல் ஒரு. செயல். என்று இருந்தவர், வேலுப்பிள்ளை பிரபாகரன்.
- அவரால், எந்தக் கூட்டத்திலும் சகஜமாய் இருக்க முடியும்.ஆனால், எந்தக் கூட்டத்தின் சட்டை சாயமும் தன்மீது ஒட்டாமல் பார்த்துக் கொள்வார்.அதாவது, யாரைப்பார்த்தும் தன்னுடைய குறிக்கோளில் இருந்து விலகாத ஓர் போராளி.