தமிழ்நாடுசெய்திகள்

தமிழ்நாடு என்ற பெயர்தான் தமிழ்நாடு பெயர் பிரச்சனையிலும் உங்களை இணைக்கிறது என்று சேகுவாராவின் மகள் அலெய்டா சேகுவேரா தெரிவித்து இருக்கிறார் !aleida guara visits chennai

கியூபாவில் இருந்து வந்த சோசியலிச புரட்சியாளரின் மகள் அலெய்டாக்கும் கூட தெரிகிறது ,தமிழ்நாடு என்ற பெயர் தான் சரியாக இருக்கும் என்று !

தமிழ்நாடு என்ற பெயர்தான் தமிழ்நாடு பெயர் பிரச்சனையிலும் உங்களை இணைக்கிறது என்று சேகுவாராவின் மகள் அலெய்டா சேகுவேரா தெரிவித்து இருக்கிறார் !

தமிழ்நாடு என்ற பெயர்தான் தமிழ்நாடு பெயர் பிரச்சனையிலும் உங்களை இணைக்கிறது என்று சேகுவாராவின் மகள் அலெய்டா சேகுவேரா தெரிவித்து இருக்கிறார் !aleida guara visits chennai

 • நேற்று மாலை சென்னை பாரி முனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் இந்திய , மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள், அகில இந்திய கியூபா ஒருமைப்பாட்டு குழு இணைந்து நடத்திய  விழாவில் புரட்சியாளர் சேகுவேராவின் மகள் அலெய்டா குவேரா மற்றும் பேத்தி எஸ்டெபானி குவேராவுக்கு வரவேற்பு அளிக்கும் நிகழ்ச்சியும், சோசலிச கியூபாவுக்கு தமிழக மக்களின் ஆதரவு தெரிவிக்கும் சிறப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
 • இந்நிகழ்சியில் , இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன், கியூபா ஒருமைப்பாட்டு குழுவின் இந்திய தலைவர் பேபி, திராவிட கழக தலைவர் கி. வீரமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணை தலைவர் கோபண்ணா, மனித நேய மக்கள் கட்சி தலைவர் ஹெச் ஜவஹிருல்லா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திருமாவளவன், கனிமொழி , சு வெங்கடேசன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.இந்நிகழ்ச்சி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது.
 • இந்நிகழ்ச்சிக்கு வந்திருந்த தலைவர்கள் அனைவரும் மேடையில் உரையாற்றினார்கள்.சிறப்பு விருந்தினரான சேகுவாராவின் மகள் அலெய்டா குவேராவும் உரையாற்றினார்கள்.அவர்கள் உரையாற்றியதாவது:
 • தமிழ்நாடு என்ற பெயர்தான் தமிழ்நாடு பெயர் பிரச்சனையிலும் உங்களை இணைக்கிறது என்று சேகுவாராவின் மகள் அலெய்டா சேகுவேரா தெரிவித்து இருக்கிறார் !aleida guara visits chennai
 • ஸ்பானிஷ், தோழர்களே, காம்ரேட்களே 5 ஆண்டுகளுக்கு முன் நான் இந்தியாவிற்கு வந்தேன், நான் அந்த அன்பை மறக்க மாட்டேன் என்றார்.தைரியமாக களத்தில் இருக்க வேண்டும் என்று என் தாய் சிறு வயதில் சொல்லி கொடுத்தார். நான் சேகுவாரா மகளாக இருப்பதால் அதிக அன்பை பெற்றேன். ஆனால் நான் யாருடைய மகள் என்பது முக்கியமில்லை நான் யாராக இருக்கிறேன் என்பதுதான் முக்கியம் என பேசினார்.
 • அத்துடன் நான் சேகுவாரா மகளாக இருக்க பெருமைபடுகிறேன். அதற்கு மட்டுமல்ல அதே போல் என் தாய்க்கு மகளாக இருக்கவும் பெருமைபடுகிறேன். இன்று நான் சமூகத்திற்கு பயனுள்ளவளாக இருப்பதற்கு என் தாய் தான் காரணம். நான் களத்தில் காலூன்றி உறுதியாக நிற்க வேண்டும் என்று என் தாய் சொல்லி இருக்கிறார் என கூறினார்.
 • அத்துடன் இன்று, நீங்கள் எனக்கு அளித்த சால்வைகள் மூலம் உங்கள் அன்பை என்னால் உணர முடிந்தது அதை நான் இங்கு விட்டு செல்ல மாட்டேன். நான் கியூப கம்யூனிஸ்ட் கட்சியின்உறுப்பினராக உள்ளேன். காம்ரேட்கள் உடன் இந்த சால்வையை பகிர்ந்து கொள்ள உள்ளேன்.

தமிழ்நாடு என்ற பெயர்தான் தமிழ்நாடு பெயர் பிரச்சனையிலும் உங்களை இணைக்கிறது என்று சேகுவாராவின் மகள் அலெய்டா சேகுவேரா தெரிவித்து இருக்கிறார் !aleida guara visits chennai

 • நாம் கூடியிருப்பது ஒற்றுமைக்காக ஒருமைப்பாட்டுக்காக இடதுசாரிகள் உலகெங்கிலும் இப்படிப்பட்ட ஒற்றுமையை, ஒருமைப்பாட்டை கட்ட வேண்டிய அவசியம் இருக்கிறது நாம் என்ன செய்தாலும் அதிலே ஒரு பொது நோக்கம் தேவைப்படுகிறது நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும் என்றார்.
 • இந்த நாட்டின் பெயர் என்ன என்று உரக்க சொல்ல சொன்ன போது, தமிழ்நாடு என்று உரக்க குரல்கள் கேட்டது. இன்று இந்த பிரச்சினையில் இந்த தமிழ்நாடு என்ற பெயர் தான் உங்களை இணைக்கிறது.  அதே போல் எந்த பொது நோக்கமாக இருந்தாலும் நாம் அனைவரும் ஒன்று சேர வேண்டும். கியூபா இன்று சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சனைகளுக்கு உங்களைப் போன்ற மக்கள் மத்தியில் ஒருமைப்பாடு வேண்டி இருக்கிறது என கூறினார்.
 • மேலும், கியூபா வளர்ச்சியடைவதை தடுக்க ஏராளமான தடை வந்துக்கொண்டு  இருந்தாலும் ஒன்றை மட்டும் தடுக்க முடியவில்லை..அதுதான் கியூபா மக்களின் வாழ்வதற்கான உரிமை. கியூபா மக்களின் மகிழ்ச்சியையும் வாழ்வுரிமையும் அவர்களால் பறிக்க முடியாது இது நீடுழி இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் சோசியலிசம் சமூக அமைப்பை பின்பற்றுகிறோம். புதிய குடும்ப நல சட்டத்தில் பாலின சமத்துவத்தை நிலைநாட்டி இருக்கிறோம். பெண்களுடைய பாதுகாப்பிற்கு ஏராளமான உத்தரவாதம் இருக்கின்றன என பேசினார்.

தமிழ்நாடு என்ற பெயர்தான் தமிழ்நாடு பெயர் பிரச்சனையிலும் உங்களை இணைக்கிறது என்று சேகுவாராவின் மகள் அலெய்டா சேகுவேரா தெரிவித்து இருக்கிறார் !aleida guara visits chennai

 • இன்று நாம் வாழும் உலகம் ஏராளமான முரண்பாடுகள் சூழ்ந்து உலகமாக இருக்கிறது.இது ஒரு மேம்பட்ட உலகமாக மாற வேண்டும் என்பதற்காகத்தான் நீங்களும் போராடுகிறீர்கள் நாங்களும் போராடுகிறோம். 
 •  தூரம் என்பது இந்தியாவிற்கும் கியூபாவுக்கும் அதிகமாக இருக்கலாம் ஆனால் கியூப மக்களும் இந்திய, தமிழக மக்களும் சகோதரர்கள் தான் என அவர் கூறினார்.
 • மேலும், என் தந்தை இறந்த போது, பலர் அழுதனர். ஒருவரை இழந்தால் உலகம் வருத்தப்படும் என்பது உண்மைதான் வருத்தம் கண்ணீரால் மட்டுமல்ல போராட்டத்தின் மூலமாகவும் வெளிப்படுத்த முடியும், நான் இறந்தால் எனக்காக அழாதீர்கள். நான் விட்டுச்செல்லும் பணியை தொடருங்கள் உங்களில் நான் இருப்பேன் என்று ஒரு பாடல் சொல்கிறது நாம் ஒருமைப்பாட்டுக்காக ஒன்றுபட்டு குரல் எழுப்புவோம் என்றும் அவர்  பேசினார்.

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button