“900 இந்திய மீனவர்கள் ஈரான் நாட்டில் ஒதுங்கி இருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அவர்களுள், 700 பேர் தமிழ்நாட்டின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

ஈரான் நாட்டில் இருந்து இந்தியாவுக்கு நேரடி வான் ஊர்திகள் இல்லை என்பதால், அவர்களை மீட்கும் பணி தாமதம் அடைந்துள்ளது. வளைகுடா நாடுகளின் வான் ஊர்திகள் தொடர்பும் இல்லை.

கொரோனா எனப்படும் கொவைட் 19 நோய்த்தொற்று, ஈரான் நாட்டிலும் பரவி இருப்பதால், அங்கே அன்றாட உணவுப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்திய மீனவர்களுக்கும் போதுமான உணவு கிடைக்கவில்லை. எனவே, அவர்கள் அச்சமும், பதற்றமும் அடைந்துள்ளனர்,” என தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ள மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களை மீட்க இந்திய அயலுறவுத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

Image may contain: one or more people, people standing and outdoor

அவர்களை மீட்பதற்கு தனி விமானம் அல்லது கப்பலை ஈரானுக்கு அனுப்பமாறு இந்திய அரசுக்கு அவர் கோரிக்கை வைத்துள்ளார்.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here