நீட் தேர்வு குறித்த அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டுள்ள 19 வயது மாணவி ஜோதிஸ்ரீதுர்கா, இறுதியாக வெளியிட்ட குரல்பதிவும், கடிதமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை ரிசர்வ் லைன் பகுதியைச் சேர்ந்த சார்பு ஆய்வாளர் முருகசுந்தரம் என்பவரின் மகள் ஜோதிஸ்ரீதுர்கா (19) கடந்த இரண்டு ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வில் தோல்வியடைந்த ஜோதிஸ்ரீதுர்கா இந்த ஆண்டு வெற்றிபெறும் நோக்கில் படித்து வந்துள்ளார். இந்நிலையில், நீட் தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ என்ற அச்சம் காரணமாக இன்று தற்கொலை செய்து கொண்டுள்ளார். தனது தற்கொலை சம்பந்தமாக ஆடியோ ஒன்றையும் ஆறுபக்க கடிதம் ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அவர் எழுதியுள்ள கடித்தத்தில், “அப்பா மறக்காம செக் அப்புக்கு போங்க. வழக்கம் போல நீங்கள் சந்தோஷமாக இருங்கள். உங்களை சுற்றியிருப்பவர்களையும் சந்தோஷமாக வைத்திருங்கள். அது உங்களால் மட்டும்தான் முடியும்.

நான் செல்கிறேன் அப்பா. நான் உங்களுக்கு நிறைய விஷயங்களை சொல்ல ஆசைப்படுகிறேன். ஆனால் அதற்கு இப்போது நேரம் இல்லை. ஸ்ரீதர் (சகோதரர்)- எனக்கு உன்னை மிகவும் பிடிக்கும். உனக்கு என்னை மிகவும் பிடிக்கும் என்பது எனக்கு தெரியும். ஆனால் என்னை மன்னித்துவிடு ஸ்ரீதர். நீதான் சிறந்த சகோதரர். நான் ஒரு கோழை.

உனது அன்புக்கும் மரியாதைக்கும் நான் தகுதியில்லாதவள். அப்பா, அம்மாவை நன்றாக பார்த்துக் கொள். எனக்காக அழ வேண்டாம். அம்மா, அப்பா கூட நீ மட்டும்தான் இப்போ இருக்கே. நீ சோகமாக இருந்தால் அவர்களும் சோகமாகிவிடுவார்கள். நீ பெரியவனாகிவிட்டாய், உயர் கல்விக்கு செல்கிறாய். அதனால் நன்றாக படி, என்னை மறந்துவிடு.

செல்போன்ல நிறைய நேரம் கேம் விளையாடாதே. அப்புறம் அதற்கு அடிமையாகிவிடுவாய். நீ இரக்கக் குணம் கொண்டவன் ஸ்ரீதர். நன்றாக படி, பொறுமையாக இரு. முட்டாள்தனமாக எதையும் வீணடித்து விடாதே. தேவிகா (சகோதரி)- நீ என்னை அதிகமாக நேசித்தாய். நீ எனக்காக எதையும் செய்தாய். எனக்கு ஆதரவாக இருந்தாய்.

Kanimozhi Manoharan's tweet - "'I am tired' - அந்த மனநிலையை உணர்ந்தவர்களுக்கு மட்டுமே தெரியும் இது தற்கொலை இல்லை NEET கொலை என்று! #BanNEET #NEETisSocial_Injustice //நீட் ...

நான் மதுரை வந்தபிறகு, உன்னை பார்க்காமல் வருந்தினேன். நான் உன்னை விட்டு செல்வதற்கு என்னை மன்னித்துவிடு. நான் உண்மையில் நன்றாக படித்தேன். ஆனால் எனக்கு பயமாக இருக்கிறது. நான் நீட் தேர்வில் தோல்வியடைந்துவிட்டால் அனைவரையும் அதிருப்திக்குள்ளாக்கியிருப்பேன். ஸ்ரீதரையும் பார்த்துக் கொள்.

இது யாருடைய தவறும் அல்ல. யாரும் யாரையும் குற்றம்சாட்டி கொள்ளாதீர்கள். அம்மு நீதான் என்னுடைய நண்பர். மாமா, அத்தை, தாத்தா, பாட்டி அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள். என் மேல் நீங்கள் நிறைய எதிர்பார்ப்புகளை வைத்திருந்தீர்கள். ஒருவேளை எனக்கு மெடிக்கல் சீட் கிடைக்காவிட்டால் உங்கள் கஷ்டமெல்லாம் வீணாகியிருக்கும். நான் சோர்ந்துவிட்டேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ஆடியோ பதிவில்,“எல்லோருமே எங்கிட்ட எக்ஸ்பர்ட் பண்ணீங்க. எனக்குத்தான் பயமா இருக்கு. ப்ளீஸ் என்னை ப்ளேம் பண்ணாதீங்க.. இது நான் எடுத்த முடிவுதான். எனக்கு ஹேப்பியான ஃபேமிலிகெடைச்சிருக்கு. எனக்குத்தான் அத பாதுகாக்க தெரியல.. அம்மா உங்கள நான் ரொம் மிஸ் பண்றேன். என்னை மன்னிச்சிடுங்க” என்று ஜோதிஸ்ரீதுர்கா அழுதுகொண்டே பேசியுள்ளார்.

இதைத்தொடர்ந்து சமூகவலைதளங்களில் #Ban_NEET என்ற ஹேஷ்டேகில் அனைவரும் நீட் தேர்வுக்கு எதிரான கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

இரண்டு தினங்களுக்கு முன்பு அரியலூரைச் சேர்ந்த மாணவர் விக்னேஷ் நீட் தேர்வு காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here