1973ல் ஏற்பட்ட எண்ணெய் விலை உயர்வின் பின்விளைவாக அமெரிக்க டாலர் இருந்த இடத்தில் தங்கம் அமர்ந்துவிட்டது.

தங்கம் அதுமுதற்கொண்டு திட்டவட்டமாக அங்கேயே இருந்துவருகிறது.

இன்றோ அமெரிக்க கச்சா எண்ணெய் விலையானது பூஜ்யம் டாலருக்கு கீழேயே சரிந்துவிட்டது. இரண்டாம் உலகப் போருக்கு முன்பு ஏற்பட்ட மாபெரும் மந்தம்(Great Depression) என்பதை விட மிக மோசமான நிலைமை.

கேட்பும்(demand) இல்லை; வழங்கலும்(supply) இல்லை என்றவாறு உற்பத்தி முடங்குகிறது. இவ்விவகாரத்தில் வேறு எந்த எண்ணெய் உற்பத்தி செய்யும் நாட்டை(பாரசீக வளைகுடா நாடுகள், இரஷ்யா உள்ளிட்டவை)விடவும் அமெரிக்காவுக்கே அதிகமான பாதிப்பு.

அமெரிக்கா இந்த எண்ணெய் வளத்துக்காகக்தான் ஈராக், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் மீது படையெடுத்தது; அதே காரணத்திற்காகத்தான் ஈரான்,வெனிசுவேலா, இரஷ்யா போன்ற நாடுகள் மீது பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மட்டும் இல்லாமல் மே.ஆசியாவில் அமைந்துள்ள நாடுகளுக்கு இடையில் பகையை ஊட்டி வளர்க்கிறது.

ஆனால் இன்று அது தனது நாட்டில் உற்பத்தி செய்யும் எண்ணெயானது பூஜ்யம் டாலர் விலைக்கு, இன்னும் சொல்லப்போனால் அதற்கும் கீழே செல்கிறது. எண்ணெய்யை விற்பதற்கு பணத்தை வாங்குவதற்கு பதிலாக அதை வாங்குவோருக்கே பணத்தை தருகிறது. கரும்பு தின்ன கூலி என்பதாக.

வாங்குவோர் அதற்கும் தயாராக இல்லை. எங்கு இருப்பு வைப்பது என கேட்கிறார்கள். ‘கொரானோ வைரஸ்’ தொற்றுப் பரவலினால் உலகெங்கும் பரவலாக ஊரடங்கு இருந்துவருவதால் எண்ணெய்க்கான கேட்பு(demand) இல்லாததால் உற்பத்தியாவதை எங்கு இருப்பில் வைப்பது? அறுபது விழுக்காட்டுக்கும் மேற்பட்ட இருப்பு ஏற்கனவே இருக்கிறது. இதனால் அமெரிக்காவில் பூஜ்யம் டாலருக்கும் கீழே ஊக வணிகம் செல்கிறது. ஆனாலும் உண்மையான எண்ணெய் வணிகம் நடைபெறுவதற்கு முடியாதவாறு ஒட்டுமொத்த முதலாளியப் பொருளாதாரம் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கிறது.

இதனால் அமெரிக்காவைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான எண்ணெய் நிறுவனங்கள் திவாலாகின்றன.

தோழர் பாஸ்கர்(முகநுால் பதிவு)

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here