அரசியல்செய்திகள்

சவுக்கு சங்கரை நாம்தமிழர் ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிட வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன் சீமான் அதிரடி அறிவிப்பு!

சவுக்கு சங்கரை ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிட வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன் சீமான் அதிரடி அறிவிப்பு! 

  • உதயநிதியை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டியிட்டால், அந்த தொகுதியில் நாம்தமிழர் கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்த மாட்டோம். சவுக்கு சங்கருக்காக நான் பரப்புரை செய்வேன் என்று சீமான்  அறிவிப்பு.

சவுக்கு சங்கரை ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிட வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன் சீமான் அதிரடி அறிவிப்பு!

  • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களை சவுக்கு சங்கர் சந்தித்துப் பேசியுள்ளார். நீதித்துறை குறித்து தவறாக கருத்து தெரிவித்ததற்காக ஆறு மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு கடலூர் சிறையில் இருந்த சவுக்கு சங்கர் உயர்நீதிமன்ற பிணையில் வெளியில் வந்துள்ளார்.
  • உயர் நீதிமன்ற பிணை கிடைத்த உடனே மேலும் 4 வழக்குகள் பதியப்பட்டு சிறையிலிருந்த சவுக்கு சங்கர் மதுரை உயர்நீதிமன்றக் கிளையின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு பிணை  வழங்கப்பட்டு சிறையிலிருந்து வெளியே வந்தார்.

சவுக்கு சங்கரை ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிட வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன் சீமான் அதிரடி அறிவிப்பு!

  • நீதித்துறை குறித்து கருத்து தெரிவிக்க கூடாது என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்ட  நிலையில் தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த சவுக்கு சங்கர் திமுகவின் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிடுவதாக தெரிவித்திருந்தார்.  தமக்கு ஆதரவாக அதிமுக மற்றும் நாம்தமிழர் பாஜக கட்சிகள் இருக்குமென்றும் அதில் தெரிவித்திருந்தார்.

சவுக்கு சங்கரை ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிட வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன் சீமான் அதிரடி அறிவிப்பு!

  • சவுக்கு சங்கர் மீது நீதித்துறை அவமதிப்பு வழக்கு பதியப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட போது கருத்து சுதந்திரத்திற்கு எதிரான தீர்ப்பு என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சவுக்கு சங்கருக்கு ஆதரவாக பேசியிருந்தார். அதற்காக சீமானுக்கு நன்றியும் வாழ்த்துக்களும் தெரிவிக்க சவுக்கு சங்கர்  சந்திப்பு நிகழ்ந்தது என்று சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
  • நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களை சந்தித்து இருப்பது அரசியல் ரீதியான சந்திப்பு என்று தெரிவிக்கப்பட்டது. 

சவுக்கு சங்கரை ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிட வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன் சீமான் அதிரடி அறிவிப்பு!

  • இந்நிலையில் உதயநிதியை எதிர்த்து சவுக்கு சங்கர் போட்டியிட்டால், அந்த தொகுதியில் நாம் தமிழர் கட்சி சார்பாக வேட்பாளரை நிறுத்த மாட்டோம். சவுக்கு சங்கர் விரும்பினால் விவசாயி சின்னத்தில் போட்டியிட வைப்பேன் தனித்து நின்றால் ஆதரித்து சவுக்கு சங்கருக்காக நான் பரப்புரை செய்வேன் என்று சீமான்  அறிவித்துள்ளார்.

சவுக்கு சங்கரை ‘விவசாயி’ சின்னத்தில் போட்டியிட வைத்து தேர்தல் பரப்புரை மேற்கொள்வேன் சீமான் அதிரடி அறிவிப்பு!

  • சவுக்கு சங்கர்  சீமான் சந்திப்பு புகைப்படங்கள் நாம் தமிழர்   கட்சியினராலும் சவுக்கு சங்கர் ஆதரவாளர்களாலும் பகிரப்பட்டு வருகிறது.

User Rating: 2.83 ( 3 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button