ஈழத்தில் இன அழிப்பு யுத்தம் முற்றுமுழுதாக நடந்தேறி முடிந்திருந்த காலகட்டம் அது. ஒன்றரை இலட்சம் தமிழர்கள் முள்வேலிக்குள் முடக்கப்பட்டு , இறுதி யுத்தத்தின் புகைப்பட ஆதாரங்கள் ஒவ்வொன்றாக வெளியாகத் தொடங்கியிருந்ததால் கோபக்கனலில் தமிழகம் அப்போது கொப்பளித்துக் கொண்டிருந்தது.

UN slams its own response to Sri Lanka's civil war - CSMonitor.com

இலங்கையை சர்வதேச சமூகத்தின் முன்பு குற்றவாளிக் கூண்டில் ஏற்ற வேண்டும், எஞ்சியிருக்கும் தமிழர்களை முகாமிலிருந்து மீட்டு அவர்களது காணிகளில் மீள் குடியமர்வு செய்ய வேண்டும் என்பதுதான் அப்போது முதன்மையாக பேசப்பட்டது.

Seeman at Nanguneri and his thoughts about the Revolution of Tamil ...

ஈழத்து வானின் போர்மேகங்கள், தமிழக அரசியல் வானில் கொந்தளிப்பான சூழலை ஏற்படுத்தியிருந்தது. 1990களுக்குப் பின்னர் உருவான தமிழக தலைமுறைக்கு ஈழப்படுகொலை என்பது மிகப்பெரிய துயரமாக அமைந்தது. தமிழகத்தின் தெருக்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தினர். ஆனால், அன்றைக்கு ஆட்சியில் இருந்த திமுக அரசு, அந்த குரலை ஒடுக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்தது. போராட்டம், ஆர்ப்பாட்டத்திற்கு அனுமதியில்லாத சூழலே நிலவி வந்தது.

Protest Over Lankan Tamil Issue Echoes in Delhi

இத்தகைய கொந்தளிப்பான சூழலில்தான் தமிழர்களின் மீதான இன அழிப்புக்கு எதிராக நாம் தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது போர்க்குரலை தொடர்ச்சியாக எழுப்பினார். இறுதி யுத்தம் தொடங்கியது முதலே ஈழத்தமிழர்களின் மீதான சிங்களப் பேரினவாதப் போக்கினை , கற்பனைக்கும் எட்டாத குரூரத் தாக்குதல்களை பெருந்திரளான மக்களிடத்தில் கொண்டு சேர்த்து ,தமிழ்த் தேசிய உணர்வைத் தட்டியெழுப்பியதில்  சீமானின் பங்களிப்பை இங்கு எவரும் மறுக்க முடியாது.

Director Seeman arrested and deported from Canada - The Hindu

திமுக அரசு, ஈழம் தொடர்பான பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி மறுத்து வந்தநிலையில், மண்டபங்களில் நடந்த அரங்க கூட்டங்கள் சீமானின் பொதுக்கூட்ட மையங்களாகின. 2005 முதல் 2009க்கு இடைப்பட்ட காலத்தில் பள்ளி, கல்லூரிகளை கடந்த அனைவருக்கும் சீமானின் பேச்சுதான் ஈழ உணர்வையும், தமிழ்தேசிய உணர்வையும் ஊட்டி வளர்த்தது என்பது யாராலும் மறுக்க முடியாத உண்மை.

ஈழ துரோகம், அரசியலில் ஊழல், சாதிக்கொடுமைகள் என பல்வேறு நெருக்கடியில் சிக்கி இருந்த தமிழகம் ஒரு மாற்றத்தை விரும்பியது. இத்தகைய அரசியலுக்கு எதிராக  ஒரு பெரும் மாற்று அரசியல் கருத்தாக்கத்தை வேர்கொள்ள வைத்ததென்றால் அது சீமானின் பேச்சுத்தான். பத்து ஆண்டுக்கு முந்தைய சீமானின் மேடைப் பேச்சு மட்டுமல்ல, அவர் குறித்த சுவரொட்டி வாசகங்கள் கூட இப்போதும் பலருக்கு நினைவில் நிற்கும்.

Current Sri Lankan Security Situation: The Duplicate Prabhakaran ...

யுத்த நெருக்கடிக்கு மத்தியிலும் நேரம் ஒதுக்கி சீமானை தலைவர் சந்தித்திருந்தார், அந்தத் தகவல் ஊடகங்களில் வெளியாகி நீண்ட நாள் கழித்தே அதிகாரப்பூர்வமாக சீமானால் அறிவிக்கப்பட்டது. விகடன் இதழில்  விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனை சந்தித்தது, குறித்து விரிவான பேட்டியை சீமான் கொடுத்திருந்தார். அந்த பேட்டியில்தான், இன்று பலராலும்,  ‘இரண்டு நிமிட சந்திப்பு, ஐந்து நிமிட சந்திப்பு’ என்று விமர்சிக்கப்படும் பிரபாகரனுடனான சீமானின் புகைப்படம் வெளியாகியிருந்தது.

Tamil politician Seeman - தாயக செய்திகள் | DSRmedias.com

அந்தப் பேட்டி இன்னும் விகடன் தளத்தில் இருக்கிறது. இப்போதல்ல, 2009ம் ஆண்டு பேட்டியிலேயே, “தனித்தமிழ், கடவுள் நம்பிக்கை, சினிமா, உடல் எடை குறைப்பு, சமையல் மேற்பார்வை, தமிழ் சினிமா நடிகர்கள்” போன்றவை குறித்து விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனுடன் உரையாடியதை சீமான் அப்போதே குறிப்பிட்டிருக்கிறார்.

அப்போதெல்லாம், அது குறித்து யாரும் கேள்வி எழுப்பவில்லை. இப்போது, அவைகள் கேள்விக்குள்ளாக்கப்படுவது,  ‘சீமான் என்ற மாற்று அரசியல் பிம்பத்தின்’ மீதான ஆளும் ஆண்ட கட்சிகளின் அச்சமே காரணம்.

Tamil Eelam Is Not LTTE – UK TAMIL NEWS

உள்ளபடியே 2009யைக் காட்டிலும் , ஈழம் பற்றி பேசுவதற்கான தேவை தமிழகத்தில் இப்போது அதிகரித்துள்ளது என்பதுதான் உண்மை. ஈழத்தின் இன்றைய சிக்கல் குறித்து ஐயா காசி ஆனந்தன் அண்மையில் பேட்டி ஒன்றில் முக்கியமான எச்சரிக்கையை வழங்கியிருப்பார்.

புலிகள் உயிர்ப்புடன் இருந்தபோது இலங்கை வரைபடத்தினுள் ஈழம் என்ற நிலமும்,அதில் தமிழர் என்ற தேசிய இன உணர்வும் பாகுபாடின்றி நிறைந்திருந்தது. ஆனால் இன்று கிழக்கு மாகாணத்தில் இசுலாமியர் , தமிழர் என்ற வேற்றுமை அதிகரித்துள்ளது. வடக்குப் பகுதியில் சிங்கள இராணுவ வீரர்களின் குடியேற்றம் தமிழர்களின் எண்ணிக்கையை சமப்படுத்தும் அளவிற்கு உயர்ந்து வருகிறது.

கவிஞர் காசி ஆனந்தன் அவர்களின் ...

20 ஆண்டுகளில் யாழ்ப்பாணத்தில் தமிழரும் , சிங்களரும் சம விகிதத்தில் இருக்கின்றனர் என்ற சூழலை உருவாக்கும் விதமாக திட்டமிட்டு இராணுவக் குடியேற்றங்கள் அதிகரிக்கப்படுகிறது. இதுபோக வளர்ச்சித் திட்டங்கள்,
சரணாலயங்கள் என்று தமிழர்களின் நிலங்கள் கையகப்படுத்தப்படுகிறது.

இலங்கைத் தீவில் தமிழர்கள் தனித்து வாழும் பகுதி என்று எதுவும் கிடையாது என்ற சூழல் உருவானால் தமிழீழம் என்ற வார்த்தையே அர்த்தமற்றுப் போய்விடும் . மண்ணை இழந்த இனம் உலக அரங்கில் அகதிகளாகவே வாழ முடியும் என்பதற்கு பல படிப்பினைகள் உண்டு.

இந்த நிலையில் தமிழகத்தின் பங்களிப்பு முக்கியமானது , ஈழம் குறித்து இங்கு தொடர்ந்து பேசப்பட வேண்டும் . இன்று தமிழக அரசியலில் ஈழத்திற்கென ஒரு உள்ளீடு இருக்கிறதென்றால் அதற்கு காரணம் சீமான் . எனவே அவர் தொடர்ந்து பேச வேண்டிய தேவை இருக்கிறது.

அதேவேளையில் சீமான் என்ற தனிமனிதன் தனது ஈழப் பயணத்தின்போது நிறைய விசயங்களை பார்த்து வியந்திருக்கலாம், அவற்றில் ஒரு கட்சித் தலைவனாக எவற்றை பொதுவெளியில் நினைவுகூர வேண்டும் என்பதில் அவர் சற்று கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதே அவரது ஆதரவாளர்களின் விருப்பமாக உள்ளது.

“என் துப்பாக்கியில் இருந்து வெடிக்கும் குண்டைப்போல, உன் வார்த்தை ஈழத்துக்காக ஒலிக்கட்டும்” என்று சீமானிடம் பிரபாகரன் சொன்னதைப்போல, தொடர்ந்து ஒலிக்கட்டும் அவரது குரல்.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here