சி.பி.எஸ்.இ தமிழ் பாடதிட்டத்தில் இருந்து திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், மா.பொ.சியின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி, தமிழகப் பெண்களின் சிறப்புகள், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு உள்ளிட்ட பகுதிகளை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் நீக்கியுள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கினால் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் யாவும் மூடப்பட்டுள்ளது. இதையடுத்து, மாணவர்களின் கல்விச் சுமையை குறைக்க சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தில் 30 சதவீதம் குறைப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் சமீபத்தில் அறிவித்திருந்தது.

HRD Minister Ramesh Pokhriyal Nishank On CBSE Reduced Syllabus ...

அதனடிப்படையில், 2020-21 ஆம் ஆண்டுக்கான சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் 9 முதல் 12ம் வகுப்புக்கான வரையிலான பாடங்களில் 30 சதவீதத்தை குறைத்துள்ளது. குறிப்பாக, 9ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் ஜனநாயக உரிமைகள் எனும் பாடம் நீக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ...

10ம் வகுப்புப் பாடத்திட்டத்தில் ஜனநாயகம், பன்முகத்தன்மை, பாலினம், ஜாதி, சமயம், இயக்கங்கள், போராட்டங்கள், ஜனநாயகத்திற்கு எதிரான சவால்கள் ஆகிய பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது.  அதேபோல்,11ம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து குடியுரிமை, தேசியவாதம், மதச்சார்பின்மை, கூட்டாட்சி, உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்டவைகள் நீக்கப்பட்டுள்ளது.

அவர்தாம் பெரியார்! - அழியாத ...

அதேபோல், 12ம் வகுப்புப் பாடத்திட்டத்திலிருந்து பாகிஸ்தான், மியான்மர், வங்காளதேசம், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளுடனான வெளியுறவுக்கொள்கைகள், மாறிவரும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி திட்டக்குழு, பணமதிப்பிழப்பு, இந்தியாவில் சமூக இயக்கங்கள் போன்ற அத்தியாயங்களும் நீக்கப்பட்டுள்ளன. பாஜக அரசியலமைப்பின் அடிப்படைகளை மாணவர்கள் உணரக்கூடாது என்பதற்காக சதிசெய்கிறது என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் இயக்கத்தினரும் கடும் கண்டனைத்தை பதிவு செய்தனர்.

K S Radhakrishnan - KSR Blogs: மேலவையும் ம.பொ.சி ...

இந்நிலையில், சி.பி.எஸ்.இ பாடதிட்டத்தில் 9,10ம் வகுப்புகளுக்கான தமிழ் பாடப்புத்தகத்தில் இருந்து திருக்குறள், சிலப்பதிகாரம், பெரியார் சிந்தனைகள், ம.பொ.சியின் எல்லைப் போராட்ட வரலாறு, ராஜராஜ சோழனின் மெய்க்கீர்த்தி, மங்கையராய் பிறப்பதற்கே எனும் தலைப்பில் தமிழகப் பெண்களின் சிறப்புகள், இந்திய தேசிய ராணுவத்தில் தமிழர்களின் பங்கு உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

A tourist place Where the king Raja's body was buried - Tamil ...

அதுமட்டுமின்றி, அறிவியல் தொழில்நுட்பம் என்ற தலைப்பில் தமிழ் பாடத்திற்கு சம்மந்தமில்லாத அனைத்தும் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. தமிழையும் தமிழர்களும் பெருமையையும் குலைப்பதற்காக பாஜக சதி செய்கிறது என்று தமிழ் ஆர்வலர்கள் குற்றச்சாட்டியுள்ளனர்.

Please complete the required fields.
3 COMMENTS

  1. வரலாறு இல்லாதவன், மிக்கப் பொரிய தமிழர் வரலாற்றை அழிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here