அரசியல்செய்திகள்

திருவண்ணாமலை குடிநீர் குழாய் முறைகேடு “வீடியோ வெளியிட்ட இளைஞர்” மீது காவல்துறை வழக்குப்பதிவு!

குடிநீர் குழாய் முறைகேடு தொடர்பாக “வீடியோ வெளியிட்ட இளைஞர்” மீது காவல்துறை வழக்குப் பதிவு!

  • குடிநீருக்கான இணைப்பு ஏதும் ஏற்படுத்தப்படாமல், முறைகேடு செய்திருப்பதாக முரளிகிருஷ்ணன் என்னும் இளைஞர் வெளியிட்ட வீடியோ வைரலானது அந்த இளைஞர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
  • திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம் இந்திரவனம் கிராமத்தில் ஜல் ஜீவன் திட்டத்தின் மூலம் அமைக்கும் பணிகள் கடந்த 10 தினங்களுக்கு முன்பு நடைபெற்ற இந்த குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளில் முறையாக குழாய் அமைக்காமல் ஒரு அடி பள்ளம் தோண்டி அதில் குடிநீர் குழாய் மட்டும் ஊன்றிச் சென்றுவிட்டதாக முரளி கிருஷ்ணன் என்பவரால் வீடியோ பதிவுகள் வெளியிடப்பட்டது. இந்த முறைகேடு தொடர்பாக வீடியோ பதிவுசெய்த படித்த இளைஞர் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

குடிநீர் குழாய் முறைகேடு தொடர்பாக “வீடியோ வெளியிட்ட இளைஞர்” மீது காவல்துறை வழக்கு பதிவு!

இந்திரவனம் முரளி கிருஷ்ணன் பேசியது:

 “எங்க ஊரில் 2020 – 23ம் ஆண்டுக்கான 15-வது நிதி குழுவின் கீழ், வீடு தோறும் புதிய குடிநீர் குழாய் அமைக்கிறார்கள். இந்த வருடத்திலிருந்து குழாய் இணைப்புக்கும், தண்ணீருக்கும் வரி போடுவதாக சொல்லி இருக்கிறார்கள். ஆனால், தண்ணீர் குழாயை திறந்தால் தண்ணீரே வராது. இதுதான் இந்த ஆண்டிற்கான புதிய திட்டம். இதில் காற்று கூட வராது. இப்படி அமைத்தால் இந்த மக்களுக்கு எந்த வகையில் உபயோகப்பட போகிறதோ என்று தெரியவில்லை. 

ஜப்பானில் கூட இப்படி ஒரு திட்டம் இருக்காது. ஆனால், எங்கள் ஊர் இந்திரவனத்தில் இருக்கிறது. இதன் மதிப்பீடு 3.69 லட்சமாம். எங்களுடைய வரிப்பணம் இப்படித்தான் போகிறது” எனக் கூறும் அவர், அந்த குழாய் அமைப்பின் கீழ் தண்ணீர் இணைப்பு ஏற்படுத்தப்படாமல்… மேலோட்டமாக போலி குழாய் அமைப்பு மட்டும் வைக்கப்பட்டுள்ளதை அப்படியே எடுத்து காட்டுகிறார். மேலும், “இந்த ஒரு குழாய் மட்டும் இப்படி அல்ல, அருகிலும் இப்படி தான் உள்ளது” என கூறும் அந்த இளைஞர், மற்றொரு குழாய் அமைப்பையும் அவ்வாறே எடுத்து காட்டினார்.

குடிநீர் குழாய் முறைகேடு தொடர்பாக “வீடியோ வெளியிட்ட இளைஞர்” மீது காவல்துறை வழக்கு பதிவு!

  • பணிகள் நடைபெறுவதை நடைபெறவில்லை என்று வீடியோ பதிவு செய்தார் என்ற அடிப்படையில் இளைஞர் முரளி கிருஷ்ணன் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர். பணிகளை முடிக்காமல் பெயரளவுக்கு கூட பணிகளை மேற்கொள்ளாமல் அதனை வெளியிட்ட வாலிபர் மீது தவறான முறையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குடிநீர் குழாய் முறைகேடு தொடர்பாக “வீடியோ வெளியிட்ட இளைஞர்” மீது காவல்துறை வழக்கு பதிவு!

  • திருவண்ணாமலை, சேத்துப்பட்டு, இந்திரவனம் கிராம இளைஞர் முரளி கிருஷ்ணன் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கை ரத்து செய்து முறையாக குழாய் அமைத்து குடிநீர் இணைப்பு வழங்க வேண்டும் என்பதே அந்தப் பகுதி மக்களின் கோரிக்கையாக தெரிவித்துள்ளனர்.

User Rating: 2 ( 1 votes)

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button