கொரோனா  அச்சம் காரணமாக 100 நாட்களுக்கு பின் நடந்த சர்வதேச டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டிஸ் அணி, வெற்றி  கண்டுள்ளது.

இங்கிலாந்து – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் சவுத்தாம்ப்டனில் நடைபெற்றது. டாஸ் வென்ற இங்கிலாந்து பேட்டிங் தேர்வு செய்தது. முதல் இன்னிங்சில் இந்த அணி 204 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அதனை தொடர்ந்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் முதல் இன்னிங்சில் 318 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. இதையடுத்து, தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி  நிதானமாக ஆடியது.  அந்த அணி இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 313 ரன்கள் எடுத்தது.

England vs West Indies: Jermaine Blackwood, Shannon Gabriel star ...

200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வெஸ்ட் இண்டிஸ் அணி ஒரு கட்டத்தில் 27 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர், ரோஸ்டனுடன் ஜோடி சேர்ந்த பிளாக்வுட் அணியின் ஸ்கோரை உயர்த்தினார். ரோஸ்டன் 37 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். ஆனால், நிலைத்து நின்று ஆடிய பிளாக்வுட் 154 பந்துகளில் 12 பவுண்டரிகள் உள்பட 95 ரன்கள் விளாசினார். இறுதியில், 6 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் வெற்றி இலக்கான 200 ரன்களை எட்டியது. இதன் மூலம் இங்கிலாந்து அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெஸ்ட் இண்டீஸ் அபார வெற்றி பெற்றது.

Jermaine Blackwood stars as West Indies beat England in Southampton

9 விக்கெட்டுகளை கைப்பற்றிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் பந்து வீச்சாளர் கேப்ரியல் ஆட்டநாயகன் விருதை தட்டிச்சென்றார். இந்த வெற்றியின் மூலம் 3 டெஸ்ட் போட்டிகளை கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் வெஸ்ட் இண்டீஸ் அணி முன்னிலையில் உள்ளது.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here