பாபர் மசூதி இடிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்கள், ”மசூதியை இடிக்க வந்த கும்பலை தடுக்க முயன்றனர்” என்று அத்வானி, முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்ட அனைவரையும் நீதிமன்றம் விடுதலை செய்தது.

கடந்த 1992ஆம் ஆண்டு உத்தரபிரதேசம் மாநிலம் அயோத்தில் உள்ள பாபர் மசூதி டிசம்பர் 6 அன்று இடிக்கப்பட்டது. இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இச்சம்பவம் திட்டமிட்டு நடத்தப்பட்டது என பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி, கல்யாண் சிங் உட்பட 49 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Babri Masjid case: LK Advani, Uma Bharti in the dock as SC allows fresh charges

வழக்கு சம்பந்தப்பட்டவர்களில் 16 பேர் இறந்தபோன நிலையில் லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றம் மீதமுள்ள 32 பேரிடம் வீடியோ கான்பரன்சிங் மூலமாக வாக்குமூலம் பெறப்பட்டது.

சிபிஐ நீதிமன்றம் இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கவிருந்தநிலையில், இந்த 32 பேரில் 26 பேர் நேரில் ஆஜராகினர்.  அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, கல்யாண் சிங், ராமஜென்மபூமி அறக்கட்டளை தலைவர் மகந்த் நிர்த்தியா கோபால் தாஸ், உமா பாரதி, சதீஷ் பிரதான் ஆகியோர் வீடியோ கான்பரன்சிங் மூலமாக ஆஜராகினர்.

2,000 பக்கங்கள் கொண்ட தீர்ப்பினை வாசித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி சுரேந்திர குமார் யாதவ், “பாபர் மசூதி இடிப்பு என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்பதற்கு போதிய ஆதாரங்கள் எதுவும் இல்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் அந்த கும்பலைத் தடுக்க முயன்றனர், அவர்களைத் தூண்டவில்லை; குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக ஆதாரங்கள், சாட்சியங்கள் திடமாக இல்லை. ஆகவே, வழக்கில் தொடர்புடைய அனைவரும் விடுதலை செய்யப்படுகின்றனர்” என்று உத்தரவிட்டார்.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here