Uncategorized

சுடு என மார்பை திறந்து காட்டி துணிச்சலாக போராட்டம் செய்த தோழர் ப.ஜீவானந்தம் | communist jeeva

சோவியத் புரட்சி ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் கம்யூனிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்தும் தெளிவு பெற்று கம்யூனிஸ்டாக தன்னுடைய இறுதிநாள் வரை சமூகத்திற்காக பாடுபட்டவர் தோழர்.ஜீவானந்தம்

சுடு என மார்பை திறந்து காட்டி துணிச்சலாக போராட்டம் செய்த தோழர் ப.ஜீவானந்தம்!

சுடு என மார்பை திறந்து காட்டி துணிச்சலாக போராட்டம் செய்த தோழர் ப.ஜீவானந்தம் | communist jeeva

 • எல்லோரும் சமம்; எல்லோரும் நிகர்; எல்லோருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்று கருதுகிற துடிப்புமிக்க சிறுவன் அவன். எதற்கும் அஞ்சாதவன். நாகர்கோயிலில் உள்ள கோட்டாறு உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்த சமயம், தன்னுடன் பயிலும் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவன் மாணிக்கத்துடன் மிகுந்த நட்பு கொண்டிருந்தான். அது தீண்டாமை சகதி ஊறியிருந்த காலம் என்பதால், ஆலயப் பிரவேச உரிமை தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு மறுக்கப்பட்டு இருந்தது.
 • கோயில்களில் விழா தொடங்கியதும் தெருமறிச்சான் என்ற தடுப்புகள் வைக்கப்படும். திருவிழா முடியும் வரையில் பட்டியல் சாதியினர் தெருமறிச் சானை தாண்டி கோயில் பக்கம் போக முடியாது. இதற்கு எதிராக வைகுண்டசாமி, நாராயணகுரு, அய்யங்காளி ஆகியோர் ஆலயப் பிரவேச போராட்டம் நடத்தினர். இப்படிப்பட்ட நிலையில் இதை உணர்ந்திருந்த சிறுவன்,தனது இளமைப் பருவத்திலேயே பட்டியல் இனத்தை சேர்ந்த தனது தோழனான மண்ணாடி மாணிக்கம் என்பவரை தெருமறிச்சானை தாண்டி கோயிலுக்குள் அழைத்துச் சென்றான். 
 • அந்த சிறுவன் வேறு யாருமில்லை.வாழ்நாள் முழுதும் சமூக நலனுக்காக பல போராட்டங்கள் நிகழ்த்தி சமூக நலனுக்காக அரும்பாடுபட்ட  தோழர்.ப.ஜீவானந்தம் அவர்கள் தான் . அவர் நாஞ்சில் நாட்டு ஆலய நுழைவுப் போராட்டத்தின் முன்னோடிக ளில் ஒருவர். 1924இல் கேரளத்தின் வைதீகக் கோட்டை யாக இருந்த வைக்கம் நகரில் தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. 

சுடு என மார்பை திறந்து காட்டி துணிச்சலாக போராட்டம் செய்த தோழர் ப.ஜீவானந்தம் | communist jeeva

 • இருபது மாதங்களுக்கு மேலாக நடைபெற்ற அந்த போராட்டத்தில் தந்தை பெரியார் பங்கேற்று வைக்கம் வீரர் என்று பெயர் எடுத்தார். சுவாமி நாராயணகுருவே போராட்டக் களத்திற்கு நேரிடையாக வந்து போராளிகளை ஆசீர் வதித்தார். ஜீவா தனது 17 ஆவது வயதில் வைக்கம் நகரில் ஆதிக்க சாதியினர் தெருவில் தீண்டாமைக் கெதிரான போராட்டத்தில் தானே சென்று கலந்து கொண்டார். 
 • வைக்கம் சத்தியாகிரகப் போரில் கலந்து கொண்டு திரும்பிய ஜீவா, தனது சொந்த மண்ணில் சுசீந்தரம் கோயிலில் நடைபெற்ற ஆலய நுழைவுப் போராட் டத்தில் கலந்து கொண்டார். அதனால் ஆதிக்க சாதியி னரால் கடுமையாகத் தாக்கப்பட்டார். அதை அதனால் பொருட்படுத்தாமல் ‘வழிவிடுவீர், வழிவிடுவீர்’ என தான் எழுதிய பாடலைபாடிக்கொண்டே கோயிலுக் குள் சென்றார்.
 • இப்போராட்டத்தில் ஜீவா தாக்கப் பட்டபோது ஏற்பட்ட காயம் கடைசி வரை விழுப்புண்ணாக நீடித்தது.  பின்பு நெல்லை சேரன்மாதேவியில் வ.வே.சு.அய்யரால் நடத்தப்பட்ட பரத்துவாஜர் ஆசிரமத்தில் ஆசிரியராக சேர்ந்தார். காங்கிரஸ் கமிட்டி யின் நிதி உதவிகளோடு நடத்தப்பட்ட அந்த ஆசி ரமத்தில் பிராமண மாணவர்களுக்கு தனியாகவும் இதர மாணவர்களுக்கு தனியாகவும் உணவு பறிமாறப்பட்டது. 
 • சுடு என மார்பை திறந்து காட்டி துணிச்சலாக போராட்டம் செய்த தோழர் ப.ஜீவானந்தம் | communist jeeva
 • மகாத்மா காந்தி தற்போது உள்ள முறையில் தனித் தனியான உணவுமுறை நீடிக்க வேண்டும். புதிதாகச் சேரும் மாணவர்களுக்கு ஒரே பந்தியில் உணவு அளிக்கலாம் என சமரசம் செய்தபோது அதனை எதிர்த்து ஜீவா ஆசிரமத்தைவிட்டு வெளியேறினார்.1931 ல்  மாபெரும் வேலை நிறுத்த போராட்டத்தை 30,000 தொழிலாளர்களை கொண்டு நடத்தினார்.
 •  பெரியாரின் சுய மரியாதை இயக்கத்தில் ஈடுபட்ட ஜீவா தேசவிடுதலை போராட்டத்திலும் ஈடுபட்டார்.  1932இல் காங்கிரஸ்காரராக சிறைபுகுந்த ஜீவா, சிறையில் பகத்சிங் சகாக்களான படுகேஷ்வர்தத், குந்தலால், வங்க புரட்சியாளர்களான ஜீவன்லால் கோஷ், சட்டர்ஜி ஆகியோரை சந்தித்தபின் சோவி யத் புரட்சி ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்தும் கம்யூ னிஸ்ட் சித்தாந்தங்கள் குறித்தும் தெளிவு பெற்று கம்யூனிஸ்டாக வெளியே வந்தார்.
 • இதே காலக் கட்டத்தில் கோவை லெட்சுமி ஆலை போராட்டம், விக்ரமசிங்கபுரம் பஞ்சாலை போராட்டம் ஆகியவற்றுக்கு ஜீவா வழிகாட்டினார். மதுரை பசு மலைமில்  போராட்டத்தில் ஜீவா தாக்கப்பட்டார். ஆவேசம் கொண்ட முத்தம்மாள் என்ற பெண் தொழிலாளி ஜீவாவை தாக்கிய, உதவி ஆய்வாளரை விளக்கு மாறால் அடித்து விட்டார்.1936ம் ஆண்டு, நவம்பர் மாதம் தமிழ்நாடு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் முதல் மாநாடு சேலத்தில் நடைபெற்றது. ஜீவா, அதன் பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். ஜீவாவின் தலைமையில், தமிழ்நாடு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி செயல்படத் தொடங்கியது.

சுடு என மார்பை திறந்து காட்டி துணிச்சலாக போராட்டம் செய்த தோழர் ப.ஜீவானந்தம் | communist jeeva

ஜமீன் ஒழிப்புத் தீர்மானம்:

 • 1937&ம் ஆண்டு சென்னை மாகாண சட்டசபைக்கு நடைபெற்ற தேர்தலில் ஜஸ்டிஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டு காங்கிரஸ் மகத்தான வெற்றி பெற்றது. இந்த வெற்றி பெறுவதற்கு ஜீவா பெரிதும் உழைத்தார்.
 • அதே ஆண்டு, வத்தலகுண்டுவில் அகில இந்திய காங்கிரஸ் மாநாடு நடைபெற்றது.  1946 பிப்ரவரி 18இல் கப்பல் படை எழுச்சிக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியின் அறைகூவலை ஏற்று சென்னையில் ஜீவா தலைமையில் நடைபெற்ற ஊர்வலம் – பிஅண்டுசி மில் அருகே போய்க் கொண்டிருந்தபோது போலீசார் தடுத்து நிறுத்தி மேற்கொண்டு நகர்ந்தால் சுடுவோம் என்றனர். சுடு என மார்பைத் திறந்து காட்டி ஜீவா முன்னேறவும் ஊர்வலம் தொடர்ந்தது.

User Rating: Be the first one !

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button