இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மைனஸ் 23% அளவிற்கு வீழ்ச்சி அடைந்துள்ள நிலையில், “அதிகாரத்தில் இருப்பவர்கள் சுயதிருப்தி மனநிலையிலிருந்து வெளியேறி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று ரகுராம்ராஜன் எச்சரித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம்ராஜன் இந்தியப் பொருளாதார வீழ்ச்சி குறித்து லிங்ட்இன் பக்கத்தில் எழுதியுள்ளர். அதில் அவர், “நாட்டின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 23.9 சதவீதம் வீழ்ச்சி அடைந்தது அனைவருக்கும் மிகப்பெரிய எச்சரிக்கைமணியாக இருக்க வேண்டும். ஏனென்றால், உலகப் பொருளாதார வல்லுநர்கள் கணித்த வீழ்ச்சியைவிட இந்தியப் பொருளாதாரத்தில் அமைப்புசாரா துறையின் வீழ்ச்சி அதிகமாக இருக்கிறது. நாட்டை நிர்வாகம் செய்யும் அதிகாரத்தில் இருப்பவர்கள் சுயதிருப்தி மனநிலையிலிருந்து வெளியேறி ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

GDP GROWTH DOWN TO 6-YEAR LOW | | The Best Kerala Administrative Service KAS Coaching Institute in Kerala.

கொரோனா வைரஸால் இத்தாலியில் கூட பொருளதாாரம் 12.4 சதவீதம்தான் வீழ்ந்தது, அமெரி்க்காவில் 9.5 சதவீதம்தான் சரிந்தது. இந்த இருநாடுகள்தான் அதிகமான பொருளதாரா சரிவைச் சந்தித்துள்ளன. கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரும் வரை பொருளாதார சிக்கல் காரணமாக, மக்கள் விருப்பப்படி செலவு செய்யும் அளவு குறையும். ஆதலால், அரசு சார்பில் அளிக்கும் நிவாரண உதவிதான் மிகவும் முக்கியமானது. எதிர்காலத்தில் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்காக வளங்களை செலவு செய்யாமல் அரசு தயக்கம் காட்டினால், அது தன்னைத்தானே தோற்கடித்துக்கொள்ளும் உத்தியாகவே பார்க்கப்படும். நிவாரண உதவிகள், நிவாரணப்பணிகள் இன்றி, நாட்டின் பொருளாதாரம் மேலே வராது. நிவாரண உதவிகள் இல்லாவிட்டால், பொருளாதாரம் இன்னும் மோசமான சேதத்தை எதிர்நோக்கும்.

அதனால், தற்காலிகமான அரைவேக்காடு சீர்திருத்தங்களான, தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை ரத்து செய்தது போன்றவை சிறிய அளவுக்குத்தான் தொழிற்சாலைகளுக்கு ஊக்கத்தைத் தரும். மோசமான செயலுக்கு சீர்திருத்தம் என பெயரிடப்பட்டது. சீர்திருத்தங்கள் என்பது பொருளாதார செயல்பாட்டை, வளர்ச்சியை தூண்டிவிட வேண்டும், உடனடியாக இல்லாவிட்டாலும்கூட, குறிப்பிட்ட காலத்துக்குப்பின், முதலீட்டாளர்களை தூண்டிவிட வேண்டும். கொரோனாவிலிருந்து உலகம் இந்தியாவுக்கு முன்பே சீரடைந்துவிடும். ஆதலால், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை அதிகப்படுத்த ஏற்றுமதியை வாய்ப்பாக பயன்படுத்திக்கொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளார்.

Please complete the required fields.
LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here